பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.
இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.
ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.
சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.
மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.
தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.இந்தத் தகவல்களை நமக்கு தேடி ஆராய்ந்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.
எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
ReplyDeleteஇன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!
எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?
"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html