சிந்து சமவெளி நாகரீகத்தைப்பற்றியும், மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களைப்பற்றியும் நாம் நன்கு அறிவோம். இன்றைய இந்து மதத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகளுக்கும், கலை, வாணியல், கட்டிடக் கலை மற்றும் புராணக் கருத்துக்களுக்கும் சிந்து சமவெளி நாகரீகம்தான் ஆணிவேர்.
2010-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற 'உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில்' பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 'அஸ்கோ பர்ப்போலா' என்ற ஆராய்ச்சியாளர், சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய அவரது ஆராய்ச்சிக் கட்டுரையை, வெளியிட்டு 'செம்மொழி விருது பெற்றார்'
இவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் சிந்துசமவெளி நாகரீகத்தின்போதே அங்கு முருகன் வழிபாடு இருந்ததாகவும், இதற்கான அழுத்தமான ஆதாரங்கள், மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு தீயசக்திகளால் ஆபத்து வரக்கூடாது என்பதற்காகவும், அழகான ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் முருகனை வழிபட்டு வளையல்கள் அணிவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் இவர் குறிப்பிடுகிறார். ஆன்றைய வளையல் அணிவிக்கும் வழக்கம்தான் 'வளைகாப்பு' என்ற பெயரில் இன்னும் தொடர்கிறதா? அப்படியானால் 'வளைகாப்பு' என்ற நிகழ்ச்சி முருகனை வேண்டியே நடத்தப்படுகிறது என்பது யாரும் அறிந்திராத செய்தி அல்லவா?
No comments:
Post a Comment