தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், (உத்தராயனம்), ஆடியில் இருந்து மார்கழி வரையில் இரவாகவும் (தட்சிணாயனம்) கருதப்படுகிறது. இவ்வாறு பார்க்கும்போது மார்கழி மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் காலை நேரமாகிறது. அக்காலத்தையே 'பிரம்ம முகூர்த்தம்' என்கிறோம். இம்மாதத்திலேயே அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கையாகும். இச்சமயத்தில் தெய்வத் திருவுருவத்தைத் தூக்கிக்கொண்டு வீதி வீதியாக பஜனை பாடிக்கொண்டு செல்வது தேவர்களை பக்தியுடன் எழுப்புவதற்காகத்தான்.
மார்கழியில் அதிகாலையில் எழுவதற்கு அறிவியல் தொடர்புள்ள காரணமும் இருக்கிறது. இம்மாதத்தில் கடும் குளிர் இருக்கும். இதனால் மனிதனின் இரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சோம்பல் அதிகமாக இருக்கும். இந்நேரத்தில் காலணி அணியாமல் நடப்பதற்கு பாத நரம்புகள் தூண்டப்படும். குளிர்ந்த நீரில் நீராடுவதால் இரத்த ஓட்டம் சீராகும். உடல் புத்துணர்ச்சி அடைந்து ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வரும். முனம் குழப்பமின்றி அமைதியாக இருக்கும். பழனி முருகன், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் இந்த மாதத்தில்தான் அதிகமாகக் கோயிலுக்குச் செல்கின்றனர்.
இந்த மார்கழி மாதத்தில் ஒவ்வொருவரும் நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நமக்கே எதிரான பகை உணர்ச்சிகளை வெளியேற்ற வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். ஆசை, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், தம்பா, ஈர்ஷ்யா, அசூயை ஆகியன அந்தப் பகை உணர்ச்சிகளாகும்.
ஆசை : பொன், பொருள், கவுரவம், பதவி, புகழ், மக்கள் மீதான ஆசை.
குரோதம் : அடுத்தவனுக்கு தீங்கு செய்து அழிக்க வேண்டுமென்ற ஆத்திரம்.
லோபம் : பிறருக்கோ, தனக்கோ துன்பம் வந்தபோது கூட தன்னிடமுள்ள பொருள்
குறைந்துவிடக்கூடாது என்கிற கெட்ட எண்ணம்.
மோகம் : குறிப்பிட்ட சிலரை மட்டும் மகிழ்விப்பதான செயல்
முதம் : 'தான்' என்ற மமதை
மாச்சர்யம் : தன்னைப்போல் இன்னொருவரும் மகிழ்வோடு இருக்கிறாரே! என்று சகிக்க
முடியாத தன்மை.
தம்பா : பிறர் தம்மை பாராட்ட வேண்டுமென்று செய்யும் தானம்
ஈர்ஷ்யா : தன்னைப்போல் அடுத்தவனும் கவலை, நோய் நொடியுடன்
வாழவில்லையே! ஏன்ற மிக மோசமான கெட்ட எண்ணம்.
அசூசை : தனக்கு தண்;டனை கிடைத்தாலும் பரவாயில்லை, அடுத்தவன் அழிய
வேண்டும் என நினைக்கும் மோசமான மனோபாவம்.
No comments:
Post a Comment