Sunday, April 24, 2011


சித்திரையில் ஏராளமான புனித நாட்கள் மலர்கின்றன!



மதுரையம்பதியில் உறையும் தமிழரசியான அன்னை மீனாட்சி, காதல் கொண்டு சுந்தரேஸ்வரரை மணம் புரிந்த நன்னாள் சித்திரை பௌர்ணமியிலேயே நிகழ்ந்தது.

ஆண்டு தோறும் இதை தமிழ் மக்கள் மதுரையிலும் இதர இடங்களிலும் மகிழ்ந்து கொண்டாடுவது இன்றும் நடக்கும் பெரும் திருவிழாவாக அமைகிறது.

திருமணஞ்சேரியிலும் அன்னையும் அப்பனும் மணம் புரியும் நாள் இதே சித்திரையில்தான்!

மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது சித்திரைத் திங்களில்தான்!

மஹாலக்ஷ்மி பூமிக்கும் வந்ததும் சித்திரையில்தான்!

அம்பிகையின் அவதாரம் சித்திரை அஷ்டமி என்பதும்

சங்கரர் சித்திரை அமாவாசை கழிந்த பஞ்சமியில் உதித்தார் என்பதும்

ராமானுஜரும் இதே சித்திரையிலேயே அவதரித்தார் என்பது

சித்திரையின் மகத்துவத்தை இன்னும் அதிகம் கூட்டும் பெரும் புனித நிகழ்வுகளாகும். .

No comments:

Post a Comment