Friday, January 21, 2011

நாம் ஏன் திருநீறு சந்தனம் குங்குமம் நெற்றி குறியில் இட்டு கொள்கிறோம்?

நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். சந்தனம், திருநீறு சிவனுக்கும், குங்குமம் சக்திக்கும் அடையாளமாகும்.
இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டி வரவேற்கின்றோம்?

வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காக சுப காரியங்கள் போதும், குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகதான் வாழை மரம் கட்டுகிறோம். அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு.
வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன், அகலமாகவும் இருக்கும். வாழை தண்டு மிகமிக மென்மையானது. கடுங்குளிரையும் கொடும் வெயிலையும் வாழைத்தண்டால் தாங்க இயலாது. இதற்காக இயற்கை தண்டை சுற்றி மடல்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்த கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிக்கட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் விடுகிறது.
அடுத்து வாழை தரும் வாழைப்பழம். பூஜையின் போது, வாழைப்பழம் பெருமளவில் பயன்படுத்துகிறோம். அப்படி என்ன வாழைப்பழத்திற்கு மகத்துவம்?
பேயன் வாழை, முகுந்தன் வாழை, பூவின் வாழை
வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் (இதுவே மொந்தன் வாழை என்று மருவியுள்ளது) தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவின் வாழையிலும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

கோயில் வழிபாடு.... கோட்பாடுகள்

கோயிலின் அமைப்பு:
கோயில் என்பது மனித உடலிலுள்ள தத்துவ ஆதாரத்திற்கு ஏற்றபடி கோயில் கட்டப்பட வேண்டுமென ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

கோபுர அமைப்பு:
ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‎‎‎‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் ‏ இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.
கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.

இராஜகோபுரத்தி‎‎ன் கோட்பாடுகள்:
எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தி‎‎ன் அருகில் செ‎‎‎‎‎‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும் இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள்.
சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் ‏இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‎‎ன்‎னது ‏இருக்கிறது எ‎‎‎‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். ‏இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையி‎‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‎‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது எ‎‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‎‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.

தத்துவங்களுக்குக் கோபுர வாயில்:
‏இராஜ கோபுரத்தி‎ன் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூ‎‎‎ன்று, ‏ஐந்து, ஏழு, ஒ‎‎ன்பது, பதினெ‎ன்று எ‎‎ன்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும்.அத்தகைய வாயில் தத்துவத்துக்கு விளக்கம் ‏இருக்கிறது.மூ‎ன்று வாயில் உள்ள இராஜ கோபுர ‏இடத்துக்கு ஜாக்கிரத, சொப்பன, சு ஷுப்தி எ‎ன்னும் மூ‎‎‎ன்று அவஸ்தைகளை அவை குறிக்கி‎ற‎ன. ஐந்து வாயில்கள் உள்ள ‏இடத்து ஐம்பொறிகளை அவை பெறுகி‎‎‎‎ன்ற‎ன. ஏழு வாயில் உள்ள ‏இடத்து மனம், புத்தி எ‎‎னும் ‏இ‎ன்னும் ‏‏இரண்டு தத்துவங்கள் சேர்க்கப் பெறுகி‎‎‎‎ன்ற‎ன. ஒ‎‎ன்பது வாயில் உள்ள ‏இடத்து சித்தம் அகங்காரம் எனும் ‏இன்னும் இரண்டு தத்துவங்கள் சேருகி‎‎ன்ற‎ன.‏ இப்படி நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில் சி‎‎ன்‎னங்களாக அமைந்திருக்கி‎ன்றன.

யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு:
ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.

கொடிக்கம்பம்:
கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும்.
குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.


கருவறை:
கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:
ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.

பிராண சக்தி :
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி) நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.
கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.


விஞ்ஞானத்தின் அடிப்படை :
இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக் கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.


தமிழ் நாட்டு கோயில்களில் சித்தர்கள் சமாதி:
சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.


பலி பீடம்:
பலி பீடம் என்பது இங்கு உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம். வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் ந‎லன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த ‏ இடத்திலே பலி கொடுக்கவேண்டும். ம‎னிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில் படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, என நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து வணங்க வேண்டும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.

மார்கழி கோலமிட்டு ...

பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து விளக்கேற்றி வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவர். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர் பரவுவதற்கு முந்தைய காலகட்டத்திற்கு தனி சக்தி உண்டாகும்.இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும் போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிப் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.சீதோஷ்ண நிலையை வாழும் சூழலுக்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷ்ண நிலையும் சமனடையும். மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும்; தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வாசலில் கோலமிட்டு சாணத்தில் பூசணிப்பூவை வைப்பதன் மூலம் பனியால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். நமது வழிபாடுகள் அனைத்துமே இயற்கையுடன் ஒத்துப்போகும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மார்கழி, தை மாதங்களில் வீட்டிற்கு அருகிலேயே பூசணிப்பூ, பரங்கிப்பூ, செம்பருத்தி உள்ளிட்ட பூ வகைகள் கிடைக்கும். அவற்றை சாணத்தின் மீது வைத்தால் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப் பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவாசப் பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
முனைவர் க.ப.வித்யாதரன்:
*முன்னோர் மொழி :*
"தை பிறந்தால் வழி பிறக்கும் "

*நடை முறை :* ." இப்போ ஏன் வீணா முயற்சிப் பண்ணிக்கிட்டு. தை பொறக்கட்டும் அப்புறமா பாக்கலாம்"
"தை பொறந்தா ஏதாவது வழி பொறக்காமலா போயிரும்"
இப்படிச் சொல்லிகொண்டு தான் இன்றைய தலைமுறை செல்வங்கள் இயலாமையால் சோம்பிப் போய் கிடக்கின்றனர். *கொடுக்கும் சாமி எப்படியும் கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கும், ஏன் அவருக்கு சிரமம்*, என்று கூரையை பிரித்துவைத்து, வானம் பார்த்து, வாய் பிளந்து காத்திருப்போரும் இருக்கிறார்கள்.முன்னோர் வாக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

*உண்மையில் :* அக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.*தையில்* அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல *வழி பிறக்கும்.* மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல *வழி பிறக்கும்*

*உணர்த்தும் நிலவரம் *: இந்த தையில் விழித்து உழைக்க அரம்பித்தால் அடுத்த தையில் பலரது வாழ்க்கையில் வழிபிறக்க காரணமாய் இருக்கலாம்.

நன்றி குவைதில் இருந்து ...சுப்ரமணியன்.நா