இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?
மதம் என்பது மனித நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. இதை புரிந்து கொண்ட முன்னோர்கள் தங்களின் சந்ததியினருக்கு வாழும் முறைப் பற்றி சொல்லவும், உயிர்களை காக்கவும் பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைத்தனர். இந்த கதாபாத்திரங்களின் குணநலன்கள் மூலம் மக்களுக்கு நல்லதை எடுத்து சொன்னார்கள். (மிக மிக சுருக்கமாக சொன்னால் பாட்டி சொல்லும் நல்வழி கதைகள்) . எந்த ஒரு பொருளும் முழுக்க முழுக்க கற்பனையினால் உருவாக்கி விட முடியாது எனவே மனித ரூபத்தில் சில மாற்றங்களை செய்து கடவுள் எனவும் அந்த கடவுள்களுக்கு தங்களுடன் வாழ்ந்த மனிதர்களின் குணநலத்தை மிகப் படுத்தியும் வடிவமைத்தனர்.
இத்தனை தெய்வங்கள் இருந்தும் அதென்ன குலதெய்வம்? கடவுள்களின் தோற்றம் பற்றி நான் முன்பே கூறிவிட்டேன். குலதெய்வமும் அப்படிதான். ஆனால் குலதெய்வங்கள் உண்மையாலும் வாழ்ந்த மனிதர்கள். தங்களுடைய இன மக்களை காப்பாற்றுவதற்காக இறந்து போன முன்னோர்களையும், அதிசய குணம் கொண்டவர்களையும் மறக்காமல் இருப்பதற்காக மக்கள் ஏற்படுத்திக் கொண்ட வழிபாட்டு முறை குலதெய்வ வழிபாடு. பாப்பாத்தி, ராசாத்தி, வெள்ளையம்மா, பெரியண்ணன், கருப்பு, வீரபத்திரன் இப்படி ஒவ்வொரு குலதெய்வத்தின் பின்னாலும் ஒரு நெஞ்சம் நெகிழ்கின்ற உண்மை சம்பவமும் மனித வாழ்க்கையும் இருக்கிறது.
தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?
விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன.
No comments:
Post a Comment