குல தெய்வம் என்பது , உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும்.ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால்,ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரியபணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர்,நட்சத்திரம்,ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள்(பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்).நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.
ஒருவருக்குக்குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்திர காளி அம்மன் என வைத்துக்கொள்வோம்.அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால்,அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது.ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால்,இந்த நிலை.எனவே,தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்திட வேண்டும்.
Sunday, March 20, 2011
நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?
மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.
பத்தும் பறந்து போகும்
“பத்தும் பறந்து போகும்…. எப்போது?’ எனக் கேட்டால், “பசி வந்தால்’ என பதில் வரும். “நமசிவாய’ என்று சொன் னாலும் கூட பத்தும் பறந்து விடும்.
திருப் புகழில் அருணகிரியார்“”ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில்ஆவி ஈரைந்தை அகற்றலாம்” என்கிறார்.“”உலகமக்களே! ஐந்தெழுத்து மந்திரமான “சிவாயநம’ என்பதை மனதில் ஓதினால் “ஆவி பத்தும்’ பறந்து விடும்.அதென்ன “ஆவி பத்து!’“ஆ’ என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் “ஆபத்து’. “வி’யுடன் சேர்த்தால் “விபத்து’. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உ<யிருக்கு வரும் துயரையும் குறிக்கும். உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது. இதனால் தான் “சிவாயநம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள்.

விரதங்களும் அவற்றின் விளக்கங்களும்,பலன்களும்
விரதமென்பது ஒன்றையே எண்ணி நம் சிந்தனையை சிதற விடாமல் அதில் மனம் நிலைத்திருக்கச் செய்வதாகும். வரிப்பது என்பது விரதம். உணவு உண் ணாமல் இருத்தலும், மிதமாக உண்டலும் தீயன நீக்கி நல்லன உண்ணும உணவு நியமமே “விரதம்” என்று அழைக்கப் படுகிறது.
இது விரதத்தின் முதற்படி மட்டு மே இதுவே விரதமாகாது. அலையும் மனத்தை அடக்கி ஒரு மனதாக நிறுத்தி இறைவன் திரு வடியில் நிலைத்திருத்தலே சிறப்பாகும். மனம் போகும் வழியில் செல்லாது தடுத்தல், புலனொடுக்கம் இவை வாழ்க்கையின் செம்மைக்குத் தேவையானது.
மனதை அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்”. இன்று உடல்நலம் பேணும் மருத்துவர்கள் கூட வாரத்தில் ஓரிரு நாட்கள் உணவைத் தவிர்ப்பது நன்மை பயக்கும் என்று கூறுகின்றார்கள்.
உடலின் மூலமாகத்தான் உத்தமனைத் தேடவேண்டும் என்று நுல்கள் கூறுகின்றன. உடலின் முக்கியத்துவத்தைத் திருமூலர்:
“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே”. என்று கூறுவார்.
-எனவே விரதம் என்பது நம் உடலையும்,மனதையும் தூய்மைப டுத்துவதற்காக மட்டுமே ஆகும்.
சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் அருளும் . .
சஷ்டி (சட்டி) விரதம் என்பது மிகப் பெரிய விரதம் ஆகும். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப் பெரிய வலிமை உண்டு என்பது நம்பிக்கை. ஐஸ்வர் யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.
சட்டியில் இருந்தால் தான் அகப் பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழி களில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர். இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது.
மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் மறைய சஷ்டி விரதம் பலனளிக்கும். ஜோதி டத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான்.
எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத் தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப் படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுக ளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது மிக மிக தவறான கருத்து. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற் கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.
சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கி யிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, பின் இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளதை காணலாம்.
தோப்புக்கரணம் போடுவது ஏன்?
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப் பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரி யர்கள் மாணவர்களைத் தோப்புக் கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்க ளாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடு வது முண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக் கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்கா வில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளி களுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சை களில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக் கரண உடற்ப யிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்தபின் மிக நல்ல மதிப் பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறு கிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுக ளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிக ளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளை யின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது கா தையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளை யின் இரு பகுதிகளும் பலன டைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோத னையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோத னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச் சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக் கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர் களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத் தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பி டுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர் களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்று கிறது.
படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக் கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழி யும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங் கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங் களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல் கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக் கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட் காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண் டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச் சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிட ங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக் கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிட ங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமி டங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
ஆன்மீகம் - கேள்வி பதில்
இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?
மதம் என்பது மனித நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. இதை புரிந்து கொண்ட முன்னோர்கள் தங்களின் சந்ததியினருக்கு வாழும் முறைப் பற்றி சொல்லவும், உயிர்களை காக்கவும் பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைத்தனர். இந்த கதாபாத்திரங்களின் குணநலன்கள் மூலம் மக்களுக்கு நல்லதை எடுத்து சொன்னார்கள். (மிக மிக சுருக்கமாக சொன்னால் பாட்டி சொல்லும் நல்வழி கதைகள்) . எந்த ஒரு பொருளும் முழுக்க முழுக்க கற்பனையினால் உருவாக்கி விட முடியாது எனவே மனித ரூபத்தில் சில மாற்றங்களை செய்து கடவுள் எனவும் அந்த கடவுள்களுக்கு தங்களுடன் வாழ்ந்த மனிதர்களின் குணநலத்தை மிகப் படுத்தியும் வடிவமைத்தனர்.
இத்தனை தெய்வங்கள் இருந்தும் அதென்ன குலதெய்வம்? கடவுள்களின் தோற்றம் பற்றி நான் முன்பே கூறிவிட்டேன். குலதெய்வமும் அப்படிதான். ஆனால் குலதெய்வங்கள் உண்மையாலும் வாழ்ந்த மனிதர்கள். தங்களுடைய இன மக்களை காப்பாற்றுவதற்காக இறந்து போன முன்னோர்களையும், அதிசய குணம் கொண்டவர்களையும் மறக்காமல் இருப்பதற்காக மக்கள் ஏற்படுத்திக் கொண்ட வழிபாட்டு முறை குலதெய்வ வழிபாடு. பாப்பாத்தி, ராசாத்தி, வெள்ளையம்மா, பெரியண்ணன், கருப்பு, வீரபத்திரன் இப்படி ஒவ்வொரு குலதெய்வத்தின் பின்னாலும் ஒரு நெஞ்சம் நெகிழ்கின்ற உண்மை சம்பவமும் மனித வாழ்க்கையும் இருக்கிறது.
தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?
விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன.

விரும்பும் வண்ணமாக காட்சி தரும் கடவுள்..!
ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.
அதைக் கேட்ட அம்மனிதன், “நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?” என்றான்.
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.
இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.
அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், “ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி”, என்று தெரிவித்தான்.
இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர்

தோஷம் போக்கும் பிரதோஷம்
இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்’ என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது என்பார்கள்.
பிரதோஷ வேளையை “ரஜ்னிமுகவேளை” எனவும் கூறுவர். இதற்கு `இரவின் முகம்’ என்பது பொருள்.
இந்த பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்கு `சாயா’ என்ற பெயரும் உண்டு. இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் `சாயரட்சை’ எனவும் அழைக்கப்படுகிறது.
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள்; அதேநேரம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள்.
எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Subscribe to:
Posts (Atom)