Friday, January 21, 2011

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டி வரவேற்கின்றோம்?

வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காக சுப காரியங்கள் போதும், குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகதான் வாழை மரம் கட்டுகிறோம். அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு.
வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன், அகலமாகவும் இருக்கும். வாழை தண்டு மிகமிக மென்மையானது. கடுங்குளிரையும் கொடும் வெயிலையும் வாழைத்தண்டால் தாங்க இயலாது. இதற்காக இயற்கை தண்டை சுற்றி மடல்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்த கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிக்கட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் விடுகிறது.
அடுத்து வாழை தரும் வாழைப்பழம். பூஜையின் போது, வாழைப்பழம் பெருமளவில் பயன்படுத்துகிறோம். அப்படி என்ன வாழைப்பழத்திற்கு மகத்துவம்?
பேயன் வாழை, முகுந்தன் வாழை, பூவின் வாழை
வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் (இதுவே மொந்தன் வாழை என்று மருவியுள்ளது) தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவின் வாழையிலும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment