கோயிலின் அமைப்பு:
கோயில் என்பது மனித உடலிலுள்ள தத்துவ ஆதாரத்திற்கு ஏற்றபடி கோயில் கட்டப்பட வேண்டுமென ஆகமங்கள் தெரிவிக்கின்றன.
கோபுர அமைப்பு:
ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் என்று கூட கூறுவார்கள். ஆலயத்தின் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் இருப்பவர்களுக்கும் இறைவனின் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.
கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.
இராஜகோபுரத்தின் கோட்பாடுகள்:
எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தின் அருகில் சென்று அதன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மானிட வடிவங்களையும் காணலாம். இறைவனின் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் இடம் பெற்று இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் இவைகளுக்கும் இடமுண்டு என்பது கோட்பாடுகள்.
சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள், அண்டத்தினுள் இன்னது இருக்கிறது என்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு இடம் பெற்றிருக்கும். இக்கோட்பாட்டை இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையின் நடைமுறையின் புறச்சின்னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது என்றால் இயற்கையில் உள்ளவைகளை எல்லாம் அதன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.
தத்துவங்களுக்குக் கோபுர வாயில்:
இராஜ கோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினென்று என்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும்.அத்தகைய வாயில் தத்துவத்துக்கு விளக்கம் இருக்கிறது.மூன்று வாயில் உள்ள இராஜ கோபுர இடத்துக்கு ஜாக்கிரத, சொப்பன, சு ஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளை அவை குறிக்கிறன. ஐந்து வாயில்கள் உள்ள இடத்து ஐம்பொறிகளை அவை பெறுகின்றன. ஏழு வாயில் உள்ள இடத்து மனம், புத்தி எனும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேர்க்கப் பெறுகின்றன. ஒன்பது வாயில் உள்ள இடத்து சித்தம் அகங்காரம் எனும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேருகின்றன. இப்படி நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில் சின்னங்களாக அமைந்திருக்கின்றன.
யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு:
ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.
கொடிக்கம்பம்:
கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும்.
குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.
கருவறை:
கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:
ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.
பிராண சக்தி :
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி) நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.
கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.
விஞ்ஞானத்தின் அடிப்படை :
இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக் கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.
தமிழ் நாட்டு கோயில்களில் சித்தர்கள் சமாதி:
சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.
பலி பீடம்:
பலி பீடம் என்பது இங்கு உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம். வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்கவேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில் படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, என நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து வணங்க வேண்டும்.
பதிவில் அதிகமான பிழைகள் உள்ளது
ReplyDeleteமிகவும் உத்தமமான விஷயங்கள்
ReplyDelete