இறந்து போன முன்னோர்கள் எந்தப் பிறவியில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது .தெய்வமாக இருக்கலாம் , யாகம் மூலம் ப்ரீதி செய்கிறார்கள் . மனிதராக இருக்கலாம் , மனிதரை அமர்த்தி வணங்கி உணவிடுகிறார்கள் . பறவையாகவோ , விலங்காகவோ பிறந்திருக்கலாம் , வாயசம் எனப்படும் காக்கைதான் பித்ரு சொரூபம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது .
எனவே , காக்கைக்கு உணவிடுகிறார்கள் . ரிஷியாக இருக்கலாம் , அர்க்யம் கொடுத்து வழிபடுகிறார்கள் . முன்னோர் பித்ரு லோகத்திலேயே இருந்தால் தர்பணம் அவர்களைச் சென்றடைகிறது . கீழே சிந்தும் எள்ளும் , தர்ப்பையும் அவர்கள் பைசாசமாக இருந்தால் அவர்களைச் சென்றடைகிறது என்பது சாஸ்திரம் . எனவெதான் திவச நாட்களில் காக்கைக்கு உணவிடுகிறோம் .
கயா முதலிய இடங்களில் செய்யும் விசேஷத் திவசத்தில் விஷ்ணு பாதத்துக்கு பிண்டமிடுவதற்கு முன் ஒரு தனி உருண்டையைக் காக்கைக்கு இடுவார்கள் .-- மானஸ தெவதா . --- தி. ம. பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .
No comments:
Post a Comment