இறந்து போன முன்னோர்கள் எந்தப் பிறவியில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது .தெய்வமாக இருக்கலாம் , யாகம் மூலம் ப்ரீதி செய்கிறார்கள் . மனிதராக இருக்கலாம் , மனிதரை அமர்த்தி வணங்கி உணவிடுகிறார்கள் . பறவையாகவோ , விலங்காகவோ பிறந்திருக்கலாம் , வாயசம் எனப்படும் காக்கைதான் பித்ரு சொரூபம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது .
எனவே , காக்கைக்கு உணவிடுகிறார்கள் . ரிஷியாக இருக்கலாம் , அர்க்யம் கொடுத்து வழிபடுகிறார்கள் . முன்னோர் பித்ரு லோகத்திலேயே இருந்தால் தர்பணம் அவர்களைச் சென்றடைகிறது . கீழே சிந்தும் எள்ளும் , தர்ப்பையும் அவர்கள் பைசாசமாக இருந்தால் அவர்களைச் சென்றடைகிறது என்பது சாஸ்திரம் . எனவெதான் திவச நாட்களில் காக்கைக்கு உணவிடுகிறோம் .
கயா முதலிய இடங்களில் செய்யும் விசேஷத் திவசத்தில் விஷ்ணு பாதத்துக்கு பிண்டமிடுவதற்கு முன் ஒரு தனி உருண்டையைக் காக்கைக்கு இடுவார்கள் .-- மானஸ தெவதா . --- தி. ம. பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .
Saturday, April 3, 2010
அரச மரம் ! முன்னோர்கள் !
மரத்தைத் தெய்வமாக மதித்து வணங்கிய பழக்கம் இந்து மதத்தில் உண்டு . புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம்
மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :மூலதோ பிரம்ம ரூபாயமத்யதே விஷ்ணு ரூபிணேஅக்ரதச் சிவரூபாயவ்ருக்ஷ ராஜாயதே நம :என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .தி. ம . பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .

Thursday, April 1, 2010
பொங்கல் பூவின் சிறப்பு
பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, மஞ்சள் குலை இவற்றுடன் நாம் படைப்பது, “பொங்கல் பூ’ என்று அழைக்கப்படும் “கண்ணுப் பிள்ளை செடி’. காடுகளிலும், தோட்டங்களிலும் எங்கும் வெள்ளைப் பூக்களுடன் நிறைந்து காணப்படும் இச்செடியை வீட்டு வாசல்களிலும் தொங்க விடுவார்கள். இச்செடியின் சாறு, கரையாத கற்களையும் கரைத்துவிடும். இச்செடிகளை வேருடன் பிடுங்கி உரலில் போட்டு நன்றாக இடித்து, அதை வென்னீரில் போட்டு கொதிக்க வைத்து சாறு எடுக்க வேண்டும். இச்சாறு நாம் வீட்டில் பயன் படுத்தும் அரைக்கீரை தண்ணீர் போல் நல்ல ருசியுடன் இருக்கும். இச்சாற்றை தினசரி இரண்டு தடவை ஒரு மாதம் வரைக் குடித்து வந்தால் நீர் நன்றாகப் பிரியும். சிறுநீரகக் கோளாறு வராது.
மேலும், சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை யாரும் காபி, டீ போன்று பானமாக அருந்தலாம். சிறுநீரகக் கற்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் கொடுத்த நன்கொடை தான் இந்த கண்ணுப் பிள்ளைச் செடி.

Subscribe to:
Posts (Atom)