முன்னோர் சொல் வேதம்
இன்று உகாதி பண்டிகை. தெலுங்கு வருடப் பிறப்பு . ஆனால் தமிழ்நாட்டிலும் இந்த உகாதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உகாதிப் பண்டிகை அன்று பஞ்சாமிர்தத்தில் சிறிது வேப்பம் பூவை கலந்து சாப்பிடுவது வெகு நாளைய வழக்கம். இதற்கு என்ன காரணம் என்று பெரியவர்களிடம் கேட்ட போது சொன்னார்கள்.
வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் கலந்தது என்பதை உணர்த்தத் தான் இப்படி சாப்பிடுவது என்று விளக்கம் கூறினார்கள். இதைப் பற்றி மேலும் விரிவாக விசாரித்ததில் தெரிந்தது .. சுவையான மருத்துவ காரணமும் இதில் இருக்கிறது என்பது.
பொதுவாகவே வேப்பம் பூ கசப்பு சுவையோடு, வயிற்றிலிருக்கும் பூச்சிகளையும் அழிக்கும் தன்மை பெற்றது. தனியாக வேம்புவை சாப்பிடுவதென்றால் சிரமப்படுவார்கள் என்பதால் தான் இப்படி இனிப்பான பொருளான பஞ்சாமிர்தத்துடன் கலந்து சாப்பிட வைத்தார்கள். அதையும் இப்படி ஒரு ஆன்மிக சடங்காக வைத்தால் தான் கடவுளை நினைத்தாவது தங்கள் உடலையும் பேணிக் காப்பார்கள் மக்கள் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் மந்திர மருத்துவமாக கொண்டு வந்தார்கள்.
இப்போது தெரிகிறதா ..அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை என்று..
No comments:
Post a Comment